குஜராத்தின் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி…

நடப்பு ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. போட்டியில்  ஹைதராபாத்-குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் குஜராத் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் குஜராத் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன்களும், ஜோஸ் பட்லர் 64 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியின் ஜெய்தேவ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து 225 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.