15-வது ஐபிஎல்-ன் 24-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல்-ன் 24-வது போட்டி, மும்பை டி.ஒய்.பாட்டில் அக்காடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களம்கண்டன.
இதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதியது இதில், 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதேபோல, டெல்லி கேபிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் கண்டது அதில், 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது அதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
அதன்பின்னர், குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் களம் கண்டது அதில், 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இதனால், முதல் தோல்வியை சந்தித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
இதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் களம் கண்டது அதில் 66 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனால், முதல் போட்டியிலே வெற்றி வாகை சூடியது.
தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. அதில், 23 ரன்கள் வித்தியாசத்தில், 2வது வெற்றியை தக்கவைத்தது.
அதன்பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது அதில், 5 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது அதில், 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களம்கண்டன. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட்டுகளுக்கு 192 ரன்களை எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர் முடிவில் 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.







