குஜராத் தேர்தல்; 1 மணி நிலவரப்படி 34.74% வாக்குகள் பதிவு

குஜராத் மாநில 2ம் கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல்…

குஜராத் மாநில 2ம் கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் மோடி, அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய்ஷாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

குஜராத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 19.17 சதவித வாக்குகளும், நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.