இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 1,83,285 பேர் எழுதவில்லை என்று
TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் குரூப் 2, 2ஏ பிரிவில் வரும் சார் பதிவாளர், வேலைவாய்ப்பு
அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. குரூப் 2, 2ஏ தேர்வை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கு ஹால் டிக்கெட்டும் வழங்கப்பட்டது.
ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட 11,78,163 பேரில் 84.44% தேர்வர்கள் அதாவது
9,94,878 பேர் மட்டுமே இன்றைய தேர்வில் பங்கேற்றதாகவும், 1,78,163 பேர்
பங்கேற்கவில்லை என்றும் TNPSC தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த தேர்வர்கள் திருப்பி
அனுப்பப்பட்ட நிலையில், பல ஆயிரம் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பெற்றுக்கொண்ட
நிலையிலும் தேர்வில் பங்கேற்காமல் போனதாகவும், ஒவ்வொரு தேர்வின் போதும்
இதுபோன்ற Absentee எண்ணிக்கை வருவது சகஜம் என்றும் தேர்வாணையத் தலைவர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.







