வெளியானது குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகள்..!

குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில்…

குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 1080 மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

குரூப்-1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் 26 இடங்களும், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 இடங்களுக்கும், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் 13 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 7 இடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் 3 பதவிகள் என மொத்தம் 92 இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காகத் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை  1,90,957 பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் 17 வகையான தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி குறித்த அட்டவணை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி டிஎன்பிஎஸ் நிர்வாகம் வெளியிட்டது. அதன் படி குரூப் 1 தேர்வு குறித்த முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டுக்கான முதன்மை தேர்வுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கு தேர்வானவர்கள் 200 ரூபாய் பணத்தை தேர்வு கட்டணமாக செலுத்தி தேவையான சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். முதன்மை தேர்வு எழுத மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.