“கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே!”- கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, “கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே, வாழிய நின் கலை திறம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில்…

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, “கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே, வாழிய நின் கலை திறம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். நடிப்பில் புது பரிணாமத்தை காட்டியவர் நடிகர் கமல். நடிகர், பாடகர், தயாரிப்பு, இயக்குனர் உள்ளிட்ட பல பரிமாணங்களை கொண்டவர் நடிகர் கமல். இவரை திரைத்துறையினர் உலகநாயகன் என்று அன்போது அழைத்து வருகின்றனர்.

நடிகர் கமல் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் வெளியான விக்ரம் படம் வெற்றியில் சாதனை படைத்தது. இவர் தற்போது இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் உடன் தனது 234வது படத்தில் மீண்டும் இணைய உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது.

https://twitter.com/CMOTamilnadu/status/1589486978957185024

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று 68-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம். என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.