முக்கியச் செய்திகள் சினிமா

கிராண்மா திரைப்படத்தின் விமர்சனம்

சோனியா அகர்வால் நடித்துள்ள கிராண்மா திரைப்படம் திகில் படமாக, அனைவரும் பார்த்து கொண்டாடும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கிராண்மா திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி உள்ளார். கிராண்மா படத்தில், சோனியா அகர்வால், விமலா ராமன் மற்றும் சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரமான பௌர்ணமி ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றதும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த சோனியா அகர்வால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்த படம் கேரளாவில் அடர்ந்த காட்டிற்கு நடுவே உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டுள்ளது. கிராண்மா ‘ இது ஒரு ஹாரர், சஸ்பென்ஸ் திரில்லர் படம். குறைவான கேரக்டர்களை சுற்றி நிறைவான விறுவிறுப்பை தந்து இருக்கும் படம் இது. கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘ கிராண்மா ‘ இந்தபடத்தில் பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீடு. அதுதான் வக்கீல் பிரியாவாக நடித்திருக்கும் விமலா ராமன் வீடு.

இவருடைய இரண்டாம் வகுப்பு படிக்கும், பிடிவாத குணம் கொண்ட பெண் நிக்கி. அவளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக ‘ திரிஷா ‘ என்ற கேரக்டரில் சோனியா அகர்வால் வருகிறார். அங்கேயே தங்கி பிடிவாத குணம் கொண்ட குழந்தையை நல்வழிப்படுத்துவதாக, அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வேலைக்கு சேருகிறார்.

 

வக்கீல் பிரியா தொழில் பிஸியாக இருப்பதால் மகளை சரிவர கவனிக்க முடியவில்லை. சிறுமி நிக்கி மனதில், இறந்து போன அவளது கிராண்மா இருப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது ஆவியாக வந்து நிக்கியுடன் உரையாடுகிறார் கிராண்மா. அதை பார்த்த பிறகு, பீதியில் வேலையை விட்டுப் போக முடிவெடுக்கிறார் சோனியா அகர்வால். ஆனால் கிரான்மாவின் ஆவி சோனியா அகர்வாலை சந்தித்து என்ன சொல்கிறது..வக்கீல் பிரியாவிற்கு அடுத்தடுத்து வரும் பிரச்சினைகள்.. சோதனைகள்..என்ன என்று படம் திரில்லிங்காக, விறுவிறுப்பாக போகும்.

சோனியா அகர்வாலின் நடிப்பால், விரல் நகத்தை கடித்த படி பார்ப்பவர்களை உண்ணிப்பாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சிஜின்லால் எஸ். எஸ். வெளிப்புறத்தையும்..காம்பாக்ட் ஆன இண்டோர் காட்சிகளையும் சூப்பராக பதிவு செய்து ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி .இன்னொரு முக்கிய அம்சம், அதிரடி இசை சங்கர் ஷர்மா. சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா,வில்லனாக ஹேமந்த் மேனன், குழந்தை நட்சத்திரம் நிக்கியாக பௌர்ணமி ராஜ் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

 

முதலில் அமைதியான நடிப்பு, படம் இறுதியில் ஆக்ரோஷமான அதிரடியில் தனது முழு அர்ப்பணிப்பை அளித்துள்ளார் சோனியா அகர்வால். வக்கீல் பிரியங்காவாக வரும் விமலா ராமன் பாந்தமான, நேர்மையான வழக்கறிஞராகவும், வில்லனை எதிர்த்து முடிந்தவரை போராடுவதும் சூப்பர். யாருமே எதிர்பார்க்காத கிளைமேக்ஸ். பாசிட்டிவாக இருக்கிறதா, நெகட்டிவ் ஆக இருக்கிறதா என்பது அல்ல விஷயம்..வித்தியாசமாக இருக்கிறது. ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அதுதான் படத்தின் சிறப்பு.

வில்லன் ஹேமாத்மேனன், தாடி வைத்த உயரமான பர்சனாலிட்டியானவர். மலையாளத்தில் எட்டுப் படங்களில் ஹீரோவாக நடித்தவராம் இவர். இப்போதும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். மிக சிறப்பாக வில்லத்தனத்தை காட்டி நடித்திருக்கிறார். பொதுவாக நிறைவான படம் என்றால், குறை சொல்லிக் கொண்டிருக்க தோன்றாது.. இதில் குறைகள் என்று பார்த்தால் விமலா ராமனின் கணவர் கேரக்டர் பற்றி படம் முழுக்க ஒன்றும் சொல்லாதது ஏன்…மற்றும் அப்படிப்பட்ட தனிப்பட்ட ஒரு இடத்தில் ப்ரியா தனது மகளுடன் வசிப்பதற்கான அவசியம் என்ன.. கிராண்மாவின் ஆவியுடன் தான் பேசுவதாக நிக்கி சொல்லும் போது திரிஷாவாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் டென்ஷன் ஆவது ஏன்.. என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. இருந்தாலும் சமீபத்தில் பார்த்த சஸ்பென்ஸ், திரில்லர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பல படங்களில் ‘ கிராண்மா ‘ சிறப்பானது.

 

கிராண்மா – திகிலூட்டும் தில்லர்

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்-முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

G SaravanaKumar

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சாத்தியமா ?

Web Editor

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளுக்கு மநீம தலைவர் கமல் அழைப்பு

G SaravanaKumar