மிக்ஜம் புயல் மழையின் காரணமாக இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 7-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் (Graduate Teachers/Block Resource Teacher Educators) 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த 25ம் தேதி அன்று வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.







