உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. மேலும், சாத்தியமுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உறுதியளித்தது.
இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியதுடன், அரசின் உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து உத்தரவிட்டார்.







