ஆளுநர் விவகாரம் : மே.3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!

முதலமைச்சர மு.க. ஸ்டாலினுக்கு மே.3ஆம் தேதி பாராட்டு விழா.

ஆளுநர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக வரும் மே.3 ஆம் தேதி முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்,

“உச்ச நீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று கொடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டும் இன்றி எல்லா மாநிலங்களுக்குமான உரிமையை நிலைநாட்டியதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதை முதலமைச்சரிடம் தெரிவித்த போது, கலந்து கொள்ள இசைவு தெரிவித்ததை அடுத்து வரும் மே.3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.