”பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஜிவி.பிரகாஷ் பதிவு!

லக்னோ மும்பை இடையேயான ரயில்பெட்டியில் தீ பரவியதாக பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜி.வி பிரகாஷ் தனது X- தளத்தில் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து மும்பை சிஎஸ்எம்டி ’புஸ்பக் எக்ஸ்பிரஸ்’ ரயில் தினசரி இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜன.22 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் வழக்கம் போல சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பெட்டியில் தீப்பற்றியுள்ளதாக பொய்யான தகவல் வெளியானது.

இதனால், பயணி ஒருவர் பொய்யான தகவல் என்று தெரியாமல் பயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் ரயிலில் இருந்து அடுத்த தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதிச் சென்றது.

அதில், எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “லக்னோ டெல்லி இடையேயான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி, அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர். எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்டு இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன். என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.