நடிகர் அஜித்குமாரின் புதிய படமான ‘குட் பேட் அஃலி’ படத்தின் டீசர் ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளனர். தற்போது இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஆர்வம் அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை த்ரிஷா ‘ரம்யா‘ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (பிப்.25) இப்படத்தின் டீசர் வருகின்ற 28-ம் தேதி வெளியாகும் என ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது படக்குழு. இப்படத்தின் இசையமைப்பைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையுடன் அஜித்குமார் இருவேறு வேடங்களில் இந்த ப்ரோமோ வீடியோவில் தோன்றினார். இப்போது இந்த ப்ரோமோ வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.







