வெளியானது #golisodarising வெப் தொடரின் டிரெய்லர்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான கோலி சோடா ரைசிங் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா. சந்தையில் மூட்டை தூக்கும்…

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான கோலி சோடா ரைசிங் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா. சந்தையில் மூட்டை தூக்கும் 4 சிறுவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும் கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.தொடர்ந்து, கோலி சோடா – 2 தயாரானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார்.கோலி படத்தில் நடித்தவர்களுடன் நடிகர்கள் சேரன், ஷ்யாம், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.இந்த நிலையில், இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற செப். 13 ஆம் திகதி வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.