#GoldRate | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்…

#GoldRate | High gold prices again! Do you know how much a razor is?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி சவரன் ரூ.57,040-க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள் : நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி… #France அரசு கவிழ்ந்தது!

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று (டிச.5) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,140-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ரூ. ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.