#GoldRate | தங்கம் விலை உயர்வு – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா ?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சென்னையில் நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 140-க்கும் ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 200-க்கும் கிராமுக்கு10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.