சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.7,240க்கும், சவரன் ரூ.57,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,160-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,240-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,920-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.







