#GoldRate | தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்…

#GoldRate | Are you going to buy gold? Do you know what the current price is?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் – ஆண்டனிக்கு நடிகர் #Soori வாழ்த்து!

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் இன்று விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.