29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள்

குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடி – 7 பேர் கைது

வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட ஏழு பேரை போலீஸார் கைது செய்து விசராரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் பிரபல நகைக் கடை
வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு ஆசாரிக்கும் வியாபார
ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது. அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு கிராமிற்கு ரூ. 400 குறைத்து தங்கம் வாங்கித் தருவதாக தியாகு கூறினாராம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, தங்கம் வாங்க கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டேரிநாதன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு தியாகு மூலம் பேசி முருகன் 2 கிலோ தங்கம் வாங்க ஏற்பாடு செய்துள்ளார்.

2 கிலோ தங்கம் வாங்க ரூ. 96 லட்சம் பணத்துடன் கருப்பம்புலத்திற்கு முருகன்
வந்துள்ளார். அப்போது பண்டேரிநாதன் அவரிடம் 850 கிராம் எடைகொண்ட தங்கத்தை
கொடுத்துவிட்டு பாக்கியை நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என அனுப்பிவிட்டார்.
இதைப் பெற்றுக் கொண்ட முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையைக்
கொடுத்து விட்டு தனியே சென்றபோது பண்டேரிநாதன் ஆட்களை அனுப்பி முருகனை
மிரட்டி தாக்கி தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றுவிட்டராம்.

பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரின்
பேரில் வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி. முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்
இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீஸார் இந்த மோசடியில்
தொடர்புடைய கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டேரிநாதன் (65), கார் டிரைவா்
திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் (29), சென்னையைச் சேர்ந்த பாலகுமார் (32),
திருத்துறைப்பூண்டி எழிலூரைச் சேர்ந்த துர்க்காதேவி (42), கருப்பம்புலம்
செல்லத்துரை (43), வடமழை மணக்காடு, தனுஷ்கொடி (32), திருத்துறைப்பூண்டி
மணிமாறன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய பலரையும் தேடி வருவதாகத் தெரிகிறது. இவர்களிடம் இருந்து
இரண்டு கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் போலீஸர் இந்த 7 பேர் மீதும் மோசடி, வழிப்பறி தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்க மோசடி சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading