GOLD RATE | இன்றைய தங்கம் விலை நிலவரம்?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 360-க்கு விற்றது.

நேற்று ரூ.60 குறைந்து ரூ.14 ஆயிரத்து 300-க்கு விற்றது. ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-ல் இருந்து சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.280-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று சற்று விலை குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.