Gold Rate Today | தங்கம் விலை மீண்டும் உயர்வு… இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அந்த வகையில் தங்கம் விலை நேற்ற (ஜுன் 18) கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.9,265க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.74,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.122க்கு விற்பனையாகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.