தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கு, சவரனுக்கு ரூ.10,80 குறைந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




