சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து. ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும்., கிராமுக்கு ரூ.50 உயர்ந்து. ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து. ஒரு கிராம் ரூ. 260-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.330 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,620-க்கும், சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.50-ம், கிலோவுக்கு ரூ.50 ஆயிரமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







