சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.207-க்கும், கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.2,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,050-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.209க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







