Gold Rate | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ.97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. அந்த வகையில், தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520-க்கும்,சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கும், கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.