Gold Rate | தங்கம் விலை ரூ.800 குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

அந்த வகையில், தங்கத்தின் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது. அதேபோல்,  வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173-க்கும், ரூ.1,73,00க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.176க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,76,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.