தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் கண்டு, மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கு சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




