Gold Rate | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

இதனை தொடர்ந்து, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11ஆயிரத்து 250-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.