Gold Rate | தங்கம் விலை ரூ.1,800 குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

அதன்படி, தங்கம் விலை நேற்று காலை தங்கம் கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, நேற்று மாலை கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், சவரன் ரூ.90,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது.

இந்த நிலையில், இன்று (அக்.30) அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.