தங்கம் விலை தினமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97ஆயிரத்து 600 என்ற உச்சத்துக்கு சென்றது. மீண்டும் அதே மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.88ஆயிரத்து 600 என்ற நிலைக்கு வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது
இதனிடையே தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ரூ.96,320-க்கும், ஒரு கிராம் ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000- க்கு விற்பனையாகிறது.







