சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இதனிடையே நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 க்கும், கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிவிலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே அதாவது, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது







