சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும்,விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







