தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்குரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9ஆயிரத்து 305க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 440 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9ஆயிரத்து 355க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.