சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்படி தற்போது தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்தை சந்தித்து, 74,000 ஆயிரத்தை எட்டி, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற பல்வேறு இடங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440-க்கும் விற்பனையாகி வருகிறது. மேலும் வெள்ளி விலை நேற்று ரூ.126 விற்பனையாகி வந்த நிலையில் இன்று எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனையாகிறது.








