GOLD PRICE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.