தொடர்ந்து சரியும் தங்கம் விலை… 2 நாட்களில் ரூ.920 குறைவு!

தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.920 குறைந்துள்ளது.  தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச…

தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.920 குறைந்துள்ளது. 

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது.  இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏறியும், இறங்கியும் காணப்பட்டது.

இந்த நிலையில் , தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.920 குறைந்துள்ளது.  அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.2) சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கும்,  கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும் விற்பனையானது.  அதேபோல் இன்று (மே,4) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கும்,  கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.