சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், சென்னையில் டிசம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,850- க்கும், ஒரு சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.82.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.82,500-க்கும் விற்பனையாகிறது. முன்னதாக, நவம்பர் 30 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.5,865-க்கும், ஒரு சவரன் ரூ.46,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.







