27 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது? இயக்குநர் வெங்கட்பிரபு தகவல்!

GOAT’ படத்தின் அடுத்த சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஜய்,  தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,  பிரபுதேவா,  மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு துவங்கியது.  இதையடுத்து இம்மாதம் இறுதியில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கவுள்ளது.  அநேகமாக மே முதல் வாரத்தில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.  யுவனின் இசையில் விஜய்யின் குரலில் வெளியான விசில் போடு என்ற அப்பாடல் கலவையான விமர்சனங்களையே பெற்றது.  இருந்தாலும் விஜய் ரசிகர்களால் அப்பாடல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது.  இந்த சாதனையை பற்றி வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவு ஒன்றையும் போட்டார்.  இந்த சாதனை எல்லாம் தளபதியால் மட்டுமே சாத்தியமானது என அவர் பதிவிட்டிருந்தார்.  அதன் பிறகு தற்போது மேலும் ஒரு பதிவு ஒன்றை வெங்கட் பிரபு போட்டுள்ளார்.  அதுதான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், `GOAT’ படத்தின் அடுத்த சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும்  என இயக்குநர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் ஜூன் 22 ஆம் தேதி தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading