வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும். தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் அங்கு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் “நாளை சம்பவம் உறுதி ”என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், கோட் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்பாடலை விஜய் பாடியுள்ளார். இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்