‘விரைவில் GOAT.. தரமான சம்பவம் இருக்கு’ – மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Greatest Of All Time திரைப்படம் விரைவில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.  லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Greatest Of All Time திரைப்படம் விரைவில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில்  நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது.  Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா, பேங்காக் என பல இடங்களில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் GOAT மிக விரைவில் வெளியாகும் எனவும், தரமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு விஜய் ரசிகர்களை கொண்டாத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.