பாக்ஸ் ஆபிஸ் சாதனை | ‘#Goat’ வசூல் நிலவரம் என்ன?

தி கோட் படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும்…

Vijay's #GOAT threatening to collect... Is the first day collection so many crores?

தி கோட் படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன் அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இரண்டாவ்து நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, விடுமுறை அல்லாத நாள் என்பதால், வெள்ளிக்கிழமை குறைந்த தி கோட் படத்தின் வசூல், விடுமுறை நாளான நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது, நேற்று உள்நாட்டில் சுமார் 33 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் ரூ.29.1 கோடி, தெலுங்கு வெர்ஷனில் ரூ.1.75 கோடி மற்றும் வடமாநிலங்களில் ரூ.2.15 கோடி வசூலும் அடங்கும்.  இதன் மூலம் வெளியான மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

வார இறுதியை தொடர்ந்து தி கோட் திரைப்படத்தின் வசூல் நேற்று முதல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளிலும் ஹவுஸ்-ஃபுல் காட்சிகளாக ஓடுவதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. அங்கும் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளியான மூன்றே நாட்களில் ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தி கோட் படத்தின் வசூல் நேற்றைவிட இன்று சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.