கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் ’#GOAT’ திரைப்படம்!

கேரளாவில் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுகிறது.  ஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர்…

கேரளாவில் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுகிறது. 

ஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் (Greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் நடிப்புக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், கோட் படத்தோடு சேர்த்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே நேரத்தில் கோட் படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் இதுவரை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால் கோட் படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ரசிகர்களுக்கு குறையாக இருந்த விஜய்யின் De – ageing செய்யப்பட்ட தோற்றம், நன்றாக பட்டை திட்டப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது. கோட் படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும் படத்தில் பல சர்ப்பரைஸ் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதில் ஒன்று தான் கோட் படத்தின் கடைசி அப்டேட்டாக வெளியாக உள்ள நான்காவது சிங்கிள்.

இந்த பாடலில் த்ரிஷா தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டில் கோட் படத்தின் முதல் நாள் காட்சி எப்போது என கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கோட் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி துவங்கும் என தெரிகிறது. கோட் படம் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 57 நிமிடங்களாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு BTS காட்சிகளுடன் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கோட் படத்தின் முதல் காட்சி கேரளாவில் திரையிடப்படுகிறது. கேரளாவில் கோட் FDFS (FIRST DAY FIRST SHOW) அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் கேரளா சென்று கோட் முதல் காட்சி பார்த்து அலப்பறை செய்ய தயாராகி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.