முக்கியச் செய்திகள்

எருதுவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு, வருங்காலங்களில் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து உரிய தேதி, நேரத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலங்காலமாக பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களால் பாரம்பரியமாகத் தொடர்ந்து நடத்தப்படுவது என்பது யாவரும் அறிந்ததே.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். அரசிடம் இருந்து அதற்கான அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்  அதற்கான பூர்வாங்க பணியில் அரசு அதிகாரிகளினால் ஏற்பட்ட காலதாமதத்தால் மக்களின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளும், அத்துமீறல்களும் ஏற்பட்டு அதனால் சாலை மறியல், கல்வீச்சு, தடியடிய என்று விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி இருக்கிறது. இச்செயல் மிகவும் வருந்ததக்கது.

மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காலம்காலமாக நடைபெற்று வரும் எருதுவிடும் விழாவிற்கு அரசு உரிய
முன்னேற்பாட்டுடன் அனுமதி அளித்து இருக்க வேண்டும். மக்கள் தங்கள் உரிமைகளை பெற வன்முறையில் இறங்கும் அளவிற்கு அரசும், அதிகாரிகளும் காலதாமதம் செய்யக் கூடாது.

வருங்காலங்களில் இதுபோல் ஒரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு தமிழக அரசு மக்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எருதுவிடும் நிகழ்ச்சி உரிய காலத்தில், உரிய நேரத்தில் பாதுகாப்பாக நடைபெற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்  எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு

G SaravanaKumar

கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!

Halley Karthik

அவிநாசி – அத்திக்கடவு திட்டம்: கருப்பு முகக்கவசம் அணிந்து போராடிய பாஜகவினர்

EZHILARASAN D