மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கவுதம் கார்த்திக்

தமிழ் திரையுலக நட்சத்திர ஜோடிகளான கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ திரைப்படத்தின் மூலம்…

தமிழ் திரையுலக நட்சத்திர ஜோடிகளான கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரும், சிம்பு நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது, கவுதம் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு இடையில் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. இதை அண்மையில் சமூக வலதளம் மூலம் உறுதிப்படுத்திய இந்த நட்சத்திர ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்தனர்.

அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன், சென்னையில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது. புதுமணத்தம்பதிகளான கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.