நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘கேம் சேஞ்சர்’ படக்குழு!

நடிகை கியாரா அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேம் சேஞ்சர்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’…

நடிகை கியாரா அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேம் சேஞ்சர்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் “ஜரகண்டி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

இத்திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘கேம் சேஞ்சர்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.