ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ டிரெய்லர் தேதி அறிவிப்பு!

ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.…

Game Changer Movie Trailer Date Announcement!

ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு திரைப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த ஜூலையில் நிறைவு பெற்றது. இதனையடுத்து படம் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 5.04 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.