ஜி7 உச்சி மாநாடு – ஹிரோஷிமா அமைதி பூங்காவில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை..

ஜப்பானின் ஹிரோஷிமா அமைதி பூங்காவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜி7…

ஜப்பானின் ஹிரோஷிமா அமைதி பூங்காவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜி7 உறுப்பு நாடுகளை தவிர இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனியா உள்ளிட்ட 7 நாடுகளும் கலந்து கொண்டுள்ளன. ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உணவு, சுகாதாரம், வளர்ச்சி உ`ள்ளிட்ட 10 அம்ச திட்டங்களை நேற்று வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று 3ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் உள்ள அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிற தலைவர்கள் அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அமைதி பூங்காவில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு வைத்திருந்த பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.