ஜி 20 மாநாடு : கூட்டறிக்கையின் சிறப்பம்சங்கள் என்ன…?

ஜி 20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில் உறுப்பு நாடுகள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த…

ஜி 20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில் உறுப்பு நாடுகள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம்.

ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அதற்கு  பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ரஷ்யா , ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து விரைவில் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன..?

-ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

-ஜி 20 யில் இணைந்துள்ள நாடுகள் உலக வணிக வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து பலமுனை வணிக கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

-பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.

-பிற நாடுகள் மீதான அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.
உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

-இதனைச் சரிசெய்ய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தை முழு மனதுடன் எதிர்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.