ஆளுநர் உத்தரவை பின்பற்றினால் நிதி கிடையாது: கல்லூரிகளுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

ஆளுநர் உத்தரவை பின்பற்றும் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் போஸ் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் 16 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால…

ஆளுநர் உத்தரவை பின்பற்றும் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் போஸ் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் 16 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை நியமனம செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழால் மம்தா பங்கேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது :

“பல்கலைக்கழகம், கல்லூரிகள் விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டால் அல்லது கல்லூரிகள் ஆளுநரின் உத்தரவை பின்பற்றினால் மாநில அரசின் நிதிகள் நிறுத்தப்படும். Tit for tat. இதில் சமரசம் இல்லை. பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீங்கள் எப்படி சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்கிறேன்.

ராஜ் பவனுக்கு எதிராக முழு அளவிலான சட்டப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.
கூட்டாட்சி அமைப்பில் தலையீடு இருப்பது தெரியவந்தால், ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணா நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். கல்வி முறையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.