முக்கியச் செய்திகள்சினிமா

அன்று முதல் இன்று வரை… காதலர்களை கட்டிப்போட்ட பாடல்கள்!!

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை அனைவரையும் கட்டிப்போட்ட காதல் பாடல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

எனக்கு நீ உனக்கு நான் என்ற புது உறவு பூத்து நிற்கின்றபோது இருக்கும் உணர்வுகளை வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அப்படிப்பட்ட காதல் வந்ததென்றால், நம்முடைய மனதை இன்னும் அதிகமாக வசியம் செய்வது சினிமா பாடல்கள். அப்படி காலத்திற்கேற்ப காதலர்களால் கொண்டாடப்படும் பிளே-லிஸ்ட்டை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.காலம் மாற மாற… காதலுடைய ஸ்டைலும் மாறும்… அப்படித்தான் பாடல்களும்… கவிதையிலும், நாடக வடிவிலும் எழுந்த காதல் பாடல்கள், 1980-களில் மாற்றம் கண்டது. நாயகன் பாட்டு பாட, அதற்கு ஏற்றவாறு கதாநாயகி தாவணி உடுத்தி, மரம், செடிகளுக்கு பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு, வெட்கம் புடைசூழ, கண்ணால் பேசிக்கொண்டு, நானத்தோடு ஓடுவது, அந்த கால இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. காதலுக்கான இலக்கணமாக அதனை அன்றைய தலைமுறை கொண்டாடியது.காதலை படத்தின் ஒரு பகுதியாக வைத்தது மாறி, காதலை மையப்படுத்தி படங்கள் வெளிவரத் தொடங்கின. திரை இயக்குநர்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இதை கொஞ்சம் அப்டேட்டட் காதல் சினிமாக்கள் என்றே சொல்லலாம். மறைமுகமாக காதலை வெளிப்படுத்திய காலம் போய், காதலை விதவிதமாக ப்ரொப்போஸ் பண்ண ஆரம்பித்த காலம் 2K காலம். இன்னும் சொல்லவேண்டுமென்றால், காதலை வெளிப்படுத்தும் டயலாக் எல்லாம் ஹிட் அடித்தன.அதேபோல காதல் பாடல்களை கவிதை நடையில்தான் எழுத வேண்டும் என்ற விதிகளை ஓரம்கட்டிவிட்டு, சாதாரண பேச்சுவழக்கில் வரிகள் அமைக்கப்பட்டன. அந்த பாடல்கள் தற்போது உள்ள 2K கிட்ஸ்களுக்கு வரம் என்றே சொல்லலாம். சில காதல்கள் தோற்றாலும், பல காதல்கள் வெற்றியில் முடிவதைக் காணமுடிகிறது. இவ்வாறு காதலர்கள் தோற்காமல் வெற்றிக்கொடி நாட்ட, காதலர் தினமும் ஒரு கருவியாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.– சுஷ்மா சுரேஷ்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

’வீட்டை விட்டு வெளியே தள்ளினார்..’ டிசைனர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்

Halley Karthik

#DCvsGT : 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி…

Web Editor

1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை: பள்ளிகல்வித்துறை

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading