முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆதித்ய தாக்கரே!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே வெள்ளிக்கிழமை சந்தித்தார். அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகனும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே சந்தித்தார். அப்போது கருணாநிதியும், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நினைவுப் பரிசாக ஆதித்ய தாக்கரே வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.